கோட்டபாயவிற்கு வழங்கப்பட்ட வீடு தொடர்பில் அரசு வெளியிட்ட தகவல்

 முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு தனது அதிகாரபூர்வ இல்லைத்தை வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சாப்ரீ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றில் வெளியிட்ட கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் அலி சாப்ரீ இதனைக் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் வழங்கிய அதிகாரபூர்வ இல்லத்தில் தாம் வசிக்கவில்லை எனவும் சொந்த இல்லத்தில் வசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பயன்படுத்திய இல்லத்தை ராஜதந்திரிகளை சந்திப்பதற்காக சில சமயங்களில் பயன்படுத்தியது உண்டு என அவர் குறிப்பிட்டுள்ளார். தமது இல்லத்தை யாருக்கும் வழங்கியதில்லை எனவும் வழங்குவதற்கான அதிகாரமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!