ஊடகங்களை கட்டுப்படுத்தும் சட்ட மூலத்திற்கு அனுர எதிர்ப்பு

ஊடக சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் சட்டமூலத்தை நிறைவேற்ற எவ்வகையிலும் இடமளிக்கப் போவதில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். நாவலப்பிட்டியில் நேற்றைய தினம் (12.06.2023) நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், தேசியப் பாதுகாப்பு என்ற பேரில் மறைந்து கொண்டு பொதுமக்களின் தகவல்களை அறிந்துகொள்ளும் உரிமைகளை முடக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
 

அரசாங்க நிறுவனங்களை மறுசீரமைத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான செய்திகளை வெளியிடுவதன் மூலம் அரசாங்கத்துக்கு பாதிப்பு ஏற்படுவதாக தெரிவித்து ஊடக நிறுவனங்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இவ்வாறான பின்புலத்தில் ஏனைய தேர்தல்களை பிற்போட்டு விட்டு ஜனாதிபதி தேர்தல் ஒன்றை நடத்தும் முனைப்பில் ரணில் விக்ரமசிங்க செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார். ஆனால் எக்காரணம் கொண்டும் ஊடகங்களின் செயற்பாடுகளை முடக்கும் சட்டமூலங்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ள நாங்கள் எவ்வகையிலும் இடமளிக்கமாட்டோம் என்று வலியுறுத்தியுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!