கனடாவில் இலவச கடவுச்சீட்டு வழங்கப்படுகறதா?

கனடாவில் காட்டுத்தீ காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணம் இன்றி கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காட்டுத்தீ பரவுகை காரணமாக கடவுச்சீட்டுக்களை தொலைத்தவர்கள் அல்லது கடவுச்சீட்டு சேதமடைந்தவர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் குடிவரவு அமைச்சர் சீன் ப்ரேசர் இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
கனடாவில் நிரந்தரமாக பதிவோர் கனடிய பிரஜைகள் மற்றும் தற்காலிக அடிப்படையில் வதிவோர் ஆகிய அனைவருக்கும் இந்த சலுகையின் மூலம் கட்டணம் எதுவும் இன்றி கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாணவர்கள் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள் மற்றும் ஏனைய வெளிநாட்டு பிரஜைகள் காட்டு தீ காரணமாக ஆவணங்களை இழந்திருந்தால் அவர்கள் தங்களுடைய வீசா காலத்தை நீடித்துக் கொள்ள கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!