சுவிஸில் பாடசாலை ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை!

சுவிட்சர்லாந்தில் 11 வயது குழந்தைகள் கூட இன்னும் டயப்பர் அணிந்து பாடசாலைக்கு வருவது கவலையளிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள பள்ளிகளில் கழிவறையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்படாததால், ஏராளமான குழந்தைகள் டயப்பர் அணிந்து வகுப்பிற்கு வருவது குறித்து பள்ளி ஆசிரியர்கள் திடுக்கிடும் கவலையை எழுப்பியுள்ளனர்.

குழந்தைகள் இப்போது 4 வயதிலேயே பள்ளிக்குச் செல்கிறார்கள், எனவே அவர்களில் சிலர் இன்னும் டயப்பர்களில் காணலாம். ஆனால், 11 வயது குழந்தைகள் கூட டயப்பர் அணிந்து பள்ளிக்கு வரும்போது, ​​அது கவலையளிக்கும் ஒரு ட்ரெண்டாக இருப்பதாக, சுவிஸ் ஆசிரியர்களின் கூட்டமைப்பின் தலைவர் டாக்மர் ரோஸ்லர் கூறியுள்ளார்.

பல குழந்தைகள் டயப்பர்களை அணிவதற்கு மிகவும் பழக்கமாகிவிட்டனர், அவர்கள் வசதியான ஆனால் சுகாதாரமற்ற அந்த முறையை மாற்றுவதில் ஆர்வம் காட்டுதில்லை. ஒரு குழந்தை சராசரியாக 18 மாதங்கள் முதல் 24 மாதங்கலுக்குள் கழிப்பறை பயிற்சி பெறவேண்டும், ஆனால் பல பெற்றோர்கள் குழந்தைகளுக்கு அதனை பயிற்றுவிப்பதில்லை, அதனை தவிர்த்து வருகின்றனர்.

குழந்தைகள் மேம்பாட்டு நிபுணர் ரீட்டா மெஸ்மர் கூறுகையில், பள்ளியில் டயப்பர் அணியும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உயர்ந்துள்ளது என்று கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!