இந்த ஆண்டின் 165 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள்!

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 165 புதிய எச்.ஐ.வி தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தேசிய பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கல்வி தகவல் மற்றும் தொடர்பாடல் பிரிவின் முன்னாள் இணைப்பாளர் வைத்தியர் சாந்த ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்தார். மாதந்தோறும் எச்.ஐ.வியினால் பாதிக்கப்பட்ட 60 முதல் 70 பேர் வரை அடையாளம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!