மேகன் மெர்க்கலின் அழைப்பை நிராகரித்த பிரபல பாப் பாடகி!

அமெரிக்க பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் Spotify podcast நிகழ்ச்சியில் தோன்றுவதற்கான மேகன் மெர்கல்லின் அழைப்பை நிராகரித்துவிட்டார். Spotify podcastயில் Archetypes எனும் நிகழ்ச்சியை மேகன் மெர்க்கல் நடத்தி வருகிறார். அவரது இந்த podcast நிகழ்ச்சியில் தோன்றுவதற்காக, அமெரிக்க பிரபல பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் டை அழைத்துள்ளார்.

தனது கையால் எழுதப்பட்ட அழைப்பை மேகன் விடுத்துள்ளார். ஆனால், மேகனின் அழைப்பை தனது பிரதிநி மூலம் டெய்லர் ஸ்விஃப்ட் மறுத்துவிட்டதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சஸ்ஸெக்ஸ் ஆப் டச்சஸான மேகன் தனது ஆடியோ நிகழ்ச்சியில் சில போலி நேர்காணல்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டார்.

மேலும், ஹரி மற்றும் மேகன் தம்பதி 2020ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இந்த திட்டத்திற்காக Spotify உடன் 20 மில்லியன் டொலர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. எனினும் சமீபத்தில் மேகனை ஒப்பந்தம் செய்த திறமை நிறுவனமான WME, ‘Archetypes பின்னால் உள்ள குழு Spotifyயில் அவர்கள் உருவாக்கிய podcast குறித்து பெருமிதம் கொள்வதாக கூறியுள்ளது.
அத்துடன் வேறொரு தளத்தில் Archetypes பார்வையாளர்களுக்காக மேகன் தொடர்ந்து கூடுதல் உள்ளடக்கத்தை உருவாக்கி வருகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளது.
 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!