சர்வாதிகார போக்கு: சபாநாயகர் மீது சஜித் கடுமையான குற்றச்சாட்டு

சபாநாயகர் மகிந்த யாப்ப அபே வரதன பக்க சார்பாகவும் ஜனநாயக விரோதமான முறையிலும் செயல்படுகின்றார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்க்கட்சியின் அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து கொண்டு சபாநாயகரின் சர்வாதிகார போக்கிற்கு எதிராக எதிர்ப்பு வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் ஆளும் கட்சியைப் போன்று எதிர்க்கட்சிக்கும் சமமான முறையில் சந்தர்ப்பங்களை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போதைய சபாநாயகர் ஆளும் கட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற வகையில் பக்க சார்பாக நடந்து கொள்வதாக குற்றம் சுமத்தியுள்ளார். கடன் மறு சீரமைப்பு குறித்த நாடாளுமன்ற விவாதங்களின் போது சபாநாயகர் பக்கச் சார்பாக செயற்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த கடன் மறு சீரமைப்பு குறித்த நாடாளுமன்ற விவாதத்தை இரவு 7:30 மணி வரையில் நீடிப்பது என முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது எனவும் சபாநாயகர் அந்த இணக்கப்பாட்டை மீறியதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை சபாநாயகரின் இந்த செயற்பாடு குறித்து பொது நலவாய நாடுகள் நாடாளுமன்ற சங்கம், சர்வதேச நாடாளுமன்ற சங்கம் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களிடம் முறைப்பாடு செய்ய உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்ம பண்டார தெரிவிக்கின்றார்.
நாடாளுமன்ற விவாதங்களின் போது எதிர்க்கட்சியினருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் வழங்கப்படவில்லை என குற்றம் சுமத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!