தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குருந்தூர்மலையில் கல்வெட்டு!

தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியுடனேயே குருந்தூர்மலையில் பௌத்தலோக நற்பணிமன்றம் கல்வெட்டை நிறுவியதாக பௌத்தலோக நற்பணிமன்றம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

“இந்த இடத்தில் புனரமைப்பு விடயங்களை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொல்பொருள் திணைக்களம், தொல்பொருள் சட்டங்களின் கீழ் இந்த விடயங்களை மேற்கொண்டுள்ளது.

தொல்பொருள் சட்டத்தின் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் இவற்றை அகற்றுவதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரமிருக்கின்றது. இந்த பெயர்ப்பலகை விடயம் தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியினைப் பெற்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

எதிர்கால சந்ததியினருக்கு இங்கு இடம்பெற்றுள்ள புனரமைப்புக்களை மேற்கொண்டவர்கள் யாரெனத் தெரியவேண்டும். அதனால்தான் இந்த பெயர்ப்பலகை முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்தவிடயத்தில் தமிழ், முஸ்லிம், சிங்கள எந்த இனத்தவர்களுக்கும் எவ்விதமான பாதிப்புக்களும் இழைக்கப்படவில்லை.

தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியினைப் பெற்றே பௌத்தலோக நற்பணிமன்றம் இந்த பெயர்பலகையை அமைத்தது. எனவே இந்த பெயர்ப்பலகை அமைக்கப்பட்டது சட்டவிரோதமான செயற்பாடு அல்ல – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!