இலங்கையில் பால்மா இறக்குமதி நிறுத்தப்படுமா…! வெளியான தகவல்

இலங்கையில் எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் பால்மா இறக்குமதியை நிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் தற்பொழுது மொத்த பால் தேவையில் 42 சதவீதமான பால் தேவையை உள்நாட்டு உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நாட்டின் மொத்த பால் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஒவ்வொரு ஆண்டிலும் சுமார் 600 மில்லியன் டொலர் நிதி செலவிடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு பால் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் வெளிநாட்டிலிருந்து பால் இறக்குமதி செய்வதனை வரையறுக்க முடியும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு பால் உற்பத்தி துறையை அபிவிருத்தி செய்ய முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, சந்தையில் வருடாந்த பால்மா தேவையை பூர்த்தி செய்வதற்கு 700 மில்லியன் லீட்டர் பால் தேவைப்படுவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!