இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதியாக கனேடியர்!

கனடாவைச் சேர்ந்த மார்க்-ஆன்ட்ரே ஃபிராஞ்சை இலங்கையில் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளராக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் நியமித்துள்ளார். அவர் ஜூலை 8 ஆம் திகதி தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.

24 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய நாடுகள் சபையில் ஃபிராஞ்ச் பணியாற்றியுள்ளார். இலங்கையில் ஐ.நா வதிவிட ஒருங்கிணைப்பாளராக அவர் நியமிக்கப்படுவதற்கு முன்னர், சிறந்த நிர்வாகம், உள்ளூர் சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக லிபியாவில் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் (UNDP) வதிவிடப் பிரதிநிதியாகச் செயற்பட்டார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!