உண்மை நல்லிணக்க ஆணைக்குழு மூலம் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டும்!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் குற்றவியல் வழக்குகள் இடம்பெற வேண்டும் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதியாகயிருக்க வேண்டும் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேசதிட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

உண்மை ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் மூலம் குற்றவியல் வழக்குகள் இடம்பெறவேண்டும் என்பது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதியாகயிருக்கவேண்டும்.

குற்றவியல் வழக்குகளை தவிர்த்தல் சர்வதேச நியமங்கள் மற்றும் தராதரங்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்.

ஆவணங்களை அழிப்பதை தவிர்த்தல் தொடர்பில் பாதுகாப்பு படையினர் உரிய அமைப்புகள் திணைக்களங்களுக்கு உத்தரவொன்றை பிறப்பிக்கவேண்டும் – ஆவணங்களை அழிப்பதை குற்றமாக அறிவிக்கவேண்டும்.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளில் முன்வைக்கப்படும் ஆதாரங்களை எதிர்கால வழக்குகளை நோக்கமாக கொண்டு பிந்தைய கட்டத்தில் நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!