சுகாதாரத் துறையில் சிக்கல்: கெஹெலியவை ஆதரிக்கும் மொட்டு எம்.பி

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல பதவி விலகவேண்டிய அவசியமில்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதாரதுறையில் நெருக்கடியான  காணரமாக தொடர்ந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள்  இடம்பெற்று வரும் நிலையில், பலர் சுகாதார  அமைச்சர் ரம்புக்வெல பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையியிலேயே சாகர காரியவசம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல  மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர். சில கடமைகளை நிறைவேற்றவே அவர் நியமிக்கப்பட்டார்.

கெஹெலிய சுகாதார அமைச்சராக பதவியேற்றவேளை நாடு பெரும் அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது ஆனால் அவர் தனது கடமையை வெற்றிகரமாக செய்துள்ளார்.
அமைச்சரின் செயற்பாடுகள் காரணமாகவே இந்த நெருக்கடி உருவானது என்பது எந்த விசாரணையின் மூலமும் இதுவரை தெரியவரவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!