வடக்கை அச்சுறுத்தும் நோய்கள்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வடக்கில் நரம்பியல் சார் நோய்தாக்கம் அதிகரித்துள்ளதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று (19.07.2023) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், அதிகரித்த மது பாவனையின் காரணமாக இன்சுலின் உற்பத்தி தடைப்படுவதோடு, நரம்பியல் சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றது.

அதேபோல போதைப்பொருள் பாவனையும் நரம்பியல் சார் நோய்கள் அதிகரிப்புக்கு ஒரு காரணமாக உள்ளது.   குறிப்பாக மதுபாவனை மற்றும் போதைபொருள் பாவனையினால் நரம்பியல் நோய்கள் மற்றும் திடீர் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த மதுபாவனையை கட்டுப்படுத்துவதற்கு சமூக ஆர்வலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!