ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் பயன்படுத்தியவருக்கு புற்றுநோய்!

அமெரிக்க மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடரைப் பயன்படுத்தியதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 18.8 மில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த Emory Hernandez Valadez என்பவருக்கு இழப்பீடு வழங்க அந்நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. குறித்த பேபி பவுடரில் கல்நார் (asbestos) கலந்திருந்தமை நோய்க்கு காரணம் என எமோரி இளைஞன் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ பதிவுகளை ஆய்வு செய்த கலிபோர்னியா மாநில நீதிமன்றம் இதை உறுதி செய்தது. அப்போது இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மனுதாரர், அவருக்கு ஆஸ்பெஸ்டாஸ் காரணமாக ஏற்படும் மீசோதெலியோமா என்ற புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.

ஆனால் ஜான்சன் பேபி பவுடர் பாதுகாப்பானது என்றும், அதில் அஸ்பெஸ்டாஸ் இல்லை என்றும், புற்றுநோய் ஏற்படாது என பல்வேறு அறிவியல் சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!