சர்வதேச சமாதான மாநாட்டின் புதிய தலைவரானார் மைத்திரிபால சிறிசேன

சர்வதேச சமாதான மாநாட்டின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வாரம் கம்போடியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

உலக சமாதான மாநாட்டின் அழைப்பின் பேரில் சென்றிருந்த அவர் நேற்று இரவு(25.07.2023) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். இவர் கம்போடியாவில் நடைபெற்ற தேர்தலில் சர்வதேச பார்வையாளராக  பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விமான நிலையத்திற்கு வந்த பின்னர் கம்போடியாவில் நடைபெற்ற தேர்தல் குறித்து பேசிய அவர், ஊழலோ வன்முறையோ இல்லாமல் பாரபட்சமின்றி அந்த தேர்தல் நடத்தப்பட்டதாக கருத்து வெளியிட்டுள்ளார். இந்த புதிய அமைதி மாநாட்டின் கீழ் ஐக்கிய நாடுகள் சபையின் 80 உறுப்பு நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!