கர்ப்பிணிகளின் மனசோர்வுக்கான சிகிச்சைக்கு முதல் மாத்திரையை அங்கீகரித்த அமெரிக்கா!

பிரசவத்திற்குப் பின் பெண்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று பிரசவத்திற்கு பின் ஏற்படும் மனச்சோர்வு. தற்போது அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மனச்சோர்வுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதல் மாத்திரையை அங்கீகரித்துள்ளது.
    
பிரசவத்திற்குப் பின்வரும் மனச்சோர்வுக்கு சிகிச்சையளிக்க Zuranolone மருந்து அங்கீகரிக்கப்பட்டது. இந்த மருந்தை சாப்பிட்டபின் 50mg அளவில் ஒரு நாளைக்கு ஒருமுறை என 14 நாட்களுக்கு உட்கொள்ள வேண்டும். இந்த மாத்திரையை உட்கொண்ட மூன்று நாட்களுக்குள் மனச்சோர்வைக் குறைக்க முடியும் என்று மருத்துவப் பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், FDA இந்த மருந்து பெட்டிகளின் லேபிளிங்கில் எச்சரிக்கையைச் சேர்த்துள்ளது. இது ஒரு நபரின் வாகனம் ஓட்டும் மற்றும் பிற அபாயகரமான செயல்களைச் செய்யும் திறனைப் பாதிக்கும் என்று FDA குறிப்பிட்டது.

ஆபத்தைக் குறைக்க, நோயாளிகள் மருந்தை உட்கொண்ட பிறகு குறைந்தது 12 மணிநேரங்களுக்கு வாகனம் ஓட்டவோ அல்லது கனரக இயந்திரங்களை இயக்கவோ கூடாது என்று FDA கூறுகிறது.

தூக்கம், தலைச்சுற்றல், வயிற்றுப்போக்கு, சோர்வு, நாசோபார்ங்கிடிஸ் (குளிர்) மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்று ஆகியவை மிகவும் பொதுவான பக்க விளைவுகள் என்று FDA கூறியது. மருந்துகளை உட்கொண்ட பிறகும் பெண்கள் பயனுள்ள கருத்தடைகளைப் பயன்படுத்த வேண்டும் என்று நிறுவனம் கூறியது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!