சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தினேஷ் குணவர்தன

பிரதமர் தினேஷ் குணவர்தன நான்கு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு சீனா நோக்கி புறப்பட்டுள்ளார். நாளை முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை பிரதமர் தினேஷ் குணவர்தன சீனாவில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீன தென் ஆசிய ஏற்றுமதி, இறக்குமதி கண்காட்சியின் விசேட அதிதியாகவும் தினேஷ் குணவர்தன பங்கேற்க உள்ளார். இந்த விஜயத்தின் போது சீனாவின் பல்வேறு முக்கியஸ்தர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!