இலங்கை தனது முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும்: ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் வலியுறுத்து

ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை அணுகலை இழந்தால், நாடு அதன் பிராந்திய நாடுகளை விட கணிசமாக பின்தங்கக்கூடும் என்பதால், உலகளாவிய ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் இலங்கை தனது முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டிய அவசரத் தேவையை இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர் வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது இலங்கையை முக்கிய சந்தைகளில் ஒருங்கிணைப்பது புளு பிளஸ் என்றும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாமல் புறக்கணிப்பது நாட்டை குறிப்பிடத்தக்க பாதகத்திற்கு உள்ளாக்கக்கூடும்.

வர்த்தகத்தைப் பொறுத்தவரையில் இலங்கையில் போதுமான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் இல்லை எனவே இலங்கை, ஜி.எஸ்.பி பிளஸிலிருந்து வெளியேறியவுடன், விரிவான வர்த்தக ஏற்பாடுகள் இல்லாத காரணத்தால், மட்டுப்படுத்தப்பட்ட சந்தை அணுகலை எதிர்கொள்ள நேரிடும். 

எனினும் ஐரோப்பிய ஆணையம் சமீபத்தில் தற்போதைய ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்தை 2027 டிசம்பர் 31 வரை நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்க முன்மொழிந்துள்ளதால், இடைக்காலமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான முன்னுரிமை அணுகலை இலங்கை இழக்காது என குறிப்பிட்டுள்ளார். 

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!