நாட்டை காப்பாற்ற தயாராகும் மிகப்பெரிய கூட்டணி : நளின் பண்டார

நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான பரந்துபட்ட கூட்டணி எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் அமைக்கப்படும் என்றும்  இதற்கான முதற்கட்ட பயணம் செப்டெம்பர் 16, 17ஆம் திகதிகளில் மாத்தறையில் ஆரம்பமாகவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும், பணவீக்கம் வீழ்ச்சியடைந்துள்ளதாக பெருமையாகப் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் மக்களுக்கு 3 வேளை உண்ண முடியாத சூழலை ஏற்படுத்தியே பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மூளைசாலிகளின் வெளியேற்றம் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வி, சுகாதாரம், வங்கி உள்ளிட்ட சகல துறைகளிலும் இது தாக்கம் செலுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதைத் தவிர தற்போதைய அரசாங்கம் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எவ்வித வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கவில்லை.

வறட்சியால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை ஈடுசெய்வதற்கான வேலைத்திட்டங்களும் அரசாங்கத்திடம் இல்லை. விவசாயத்துக்கான நீரையும், குடிநீரையும் வழங்குவதற்கு அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் என்ன? என்று நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!