பாரிய வீழ்ச்சியை சந்திக்கவுள்ள கல்வித்துறை!

ல்வித்துறை!
[Wednesday 2023-08-23 05:00]

பாடசாலை அமைப்பில் 45,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்த ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சிடம் சரியான வேலைத்திட்டம் இல்லாததால், இலங்கையின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் அபாயம் இருப்பதாக இலங்கை கல்வியாளர் சேவை விரிவுரையாளர்கள் தொழில் சங்கத்தின் செயலாளர் சவநதிலக்க கஜதீர தெரிவித்துள்ளார்.  

கண்டியில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் தோற்றி ஆசிரியர் கலாசாலைகளுக்குள் நுழைய எதிர்பார்த்த மாணவர்கள் கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாக வீட்டிலேயே தங்கியுள்ளனர்.

கடந்த கொவிட் பருவத்தில், பல ஆசிரியர் கல்லூரிகள் சிகிச்சை மையங்களாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், பயன்பாட்டிற்குப் பிறகு மெத்தைகள் மற்றும் தலையணைகள் அழிக்கப்பட்டதால் அவர்களின் பல வளங்கள் இழக்கப்பட்டுள்ளதாகவும் கஜதீர கூறினார்.

ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் சேவையில் பணிபுரிந்து ஆசிரியர் பயிற்றுவிப்பாளராக சேவையில் இணைவதாகவும் ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் குறைவாகவே உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!