டலஸ் – அனுர கூட்டணி ராஜபக்சவினருக்கு சவால் இல்லை!

டலஸ் – அனுர கூட்டணி பொதுஜன பெரமுனவுக்கு சவாலாக அமையாது. எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேசிய தேர்தல்களில் ராஜபக்ஷர்கள் தலைமையில் தனித்த அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
    
புத்தளம் பகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். காலி முகத்திடல் பயங்கரவாத போராட்டத்தை தொடர்ந்து பொதுஜன பெரமுனவின் அரசியலும்,ராஜபக்ஷர்களின் அரசியலும் முடிவுக்கு வந்து விட்டது என்று குறிப்பிட்டார்கள். ஆனால் ராஜபக்ஷர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஒருதரப்பினர் இன்றும் அரசியல் பிரச்சாரம் செய்துக் கொள்கிறார்கள்.

2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட போது எம்மை வீதி வீதியாக அலையவிடுவதாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
ஆனால் காலவோட்டத்தி;ன் பின்னர் 2019 ஆம் ஆண்டு வெட்கமில்லாமல் எம்முடன் இணைந்துக் கொண்டு பாராளுமன்றத்தில் பொதுஜன பெரமுனவின் இருப்பை தக்கவைத்துக் கொண்டார்.

ராஜபக்ஷர்களின் புண்ணியத்துடன் பாராளுமன்றத்துக்கு தெரிவாகிய மைத்திரிபால சிறிசேன தற்போது குறிப்பிடுகிறார்.பொதுஜன பெரமுன என்ற கட்சி ஒன்று இல்லை என்று கட்சியை பலப்படுத்த மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்துடன் நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம்.

பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்கவுடன் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

டலஸ் – அனுர கூட்டணி பொதுஜன பெரமுனவுக்கு சவாலாக அமையாது.கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளோம். எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேசிய தேர்தல்களில் ராஜபக்ஷர்கள் தலைமையில் தனித்த அரசாங்கத்தை ஸ்தாபிப்போம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!