இலங்கையில் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொள்ள முடியாது அவதியுறும் மக்கள்

இலங்கையில் சுமார் 89,000 குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாது மக்கள் அவதியுறுவதாக தெரிவிக்கப்படுகிறது. 19 மாவட்டங்களில் நிலவி வரும் வறட்சி நிலமை காரணமாக பெருந்தொகையான மக்கள் இவ்வாறு குடிநீருக்கு தட்டுப்பாட்டை உணர்கின்றதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  19 மாவட்டங்களைச் சேர்ந்த 307,000 பேர் குடிநீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இதேவேளை விவசாய காணிகளும் போதியளவு நீர் வசதி இன்றி பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  இரத்தினபுரி, கேகாலை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், குருநாகல், யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, பதுளை, மொனராகலை, அம்பாந்தோட்டை, கம்பஹா, மாத்தளை, கண்டி,  பொலன்னறுவை மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!