கொழும்பில் மீண்டும் பொலிஸ் பதிவு! – நிறுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் இணக்கம்

கொழும்பில் சில பகுதிகளில், வழங்கப்பட்ட பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி வழங்க வேண்டிய அவசியமில்லை என்று, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகரில், வெள்ளவத்தை, கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி, கடற்கரை பொலிஸ் உட்பட பல பொலிஸ் நிலையங்களின் மூலம், குடியிருப்பாளர்களை பதிவு செய்யும் நடைமுறை மீண்டும் ஆரம்பமாகியுள்ளதாகவும் இது தொடர்பில் தமது விவரங்களை எழுத்து மூலம், பொலிஸார் தரும் படிவங்களில் எழுதி தருவதிலுள்ள அசெளகரியங்களை பற்றியும், கொழும்பு வாழ் மக்கள், தன்னிடம் முறைப்பாடு மேற்கொண்டுள்ளதாக ​அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில், தான், இன்று பொலிஸ்மா அதிபரிடம் கலந்துரையாடியதாகவும் இந்த நடைமுறையை, உடனடியாக நிறுத்துமாறும் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக்கொண்டு, இந்த நடைமுறையை உடன் நிறுத்ததுவதாக, பொலிஸ்மா அதிபர் தன்னிடம் உறுதியளித்ததாகவும், எனவே இந்தப் பொலிஸ் பதிவு விபர படிவங்களை நிரப்பி, பொலிஸ் தரப்பினருக்கு வழங்க வேண்டாம் என, கேட்டுக்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!