கொழும்புத் துறைமுகத்தில் சீனாவின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல்

சீனக் கடற்படையின் சமுத்திரவியல் ஆய்வுக் கப்பல் ஒன்று சிறிலங்காவுக்கு நான்கு நாட்கள் பயணம் மேற்கொண்டு, நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

சீன மக்கள் விடுதலை இராணுவ கடற்படையின் ‘Qian Weichang’ என்ற பெயருடைய இந்தக் கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறையில் வரவேற்பு அளித்தனர்.

இந்தக் கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையினர் ஒழுங்கு செய்யும் நிகழ்வுகளில் சீன கடற்படை மாலுமிகள் பங்கேற்கவுள்ளனர்.

129 மீற்றர் நீளமும், 17 மீற்றர் அகலமும் கொண்ட இந்தக் கப்பலில் 158 மாலுமிகள் உள்ளனர்.

நாளை கொழும்புத் துறைமுகத்தில் இருந்து சீன கப்பல் புறப்பட்டுச் செல்லவுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!