ரஷ்யாவுடன் இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான செயலணிக் குழுவை உருவாக்க அனுமதி

ரஷ்யாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில், இராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டு செயலணிக் குழுக்களை உருவாக்குவதற்கு சிறிலங்கா அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2004ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமைய, இந்த கூட்டு செயலணிக் குழுக்களை உருவாக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமைச்சரவையில், இதற்கான யோசனையை முன்வைத்தார்.

இந்தச் செயலணிக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக,கூட்டு உடன்பாட்டு ஆவணத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!