அனுமதியின்றி விமானத்தை எடுத்துச்சென்ற நபர்- துரத்தி சென்ற போர் விமானங்கள்

அமெரிக்காவின் சியட்டலின் டகமோ விமானநிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் அற்ற விமானத்தை நபர் ஒருவர் அனுமதியின்றி செலுத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விமானநிலையத்தின் பொறியல் பிரிவை சேர்ந்த பணியாளர் ஒருவர் அனுமதியின்றி விமானநிலையத்தை செலுத்தியதால் உடனடியாக விமானநிலையத்தை மூடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் இரு எவ்15 யுத்த விமானங்கள் அந்த விமானத்தை துரத்திச்சென்றதாகவும் இதன் காரணமாக அந்த நபர் விமானத்தை தரையிறக்க முற்பட்ட வேளை விமானம் விழுந்து நொருங்கி கொல்லப்பட்டுள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

29 வயது நபரே இதனை செய்தார் இது பயங்கரவாத செயல் இல்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹொரிசன் எயர்லைன்ஸ் விமானசேவையின் விமானத்தையே குறிப்பிட்ட நபர் எடுத்துச்சென்றுள்ளார்.

குறிப்பிட்ட சம்பவம் இடம்பெறுவதை பார்த்த ஒருவர் இது பைத்தியக்காரத்தனமான செயல் நபர் உத்தரவைமீறி விமானம் ஒன்றை எடுத்துச்சென்றுள்ளார்,என டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை குறிப்பிட்ட விமானத்தை இரு போர் விமானங்கள் துரத்திசெல்வதை காண்பிக்கும் பல வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

விமானநிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுடன் குறிப்பிட்ட நபர் எவ்வாறான உரையாடலை மேற்கொண்டார் என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதேவேளை விமானத்தில் எவ்வளவு எரிபொருட்கள் இருக்கின்றன என்பது குறித்து எனக்கு கவலையில்லை, நான் வீடியோ கேம்களை விளையாடியுள்ளதால் என்னால் விமானத்தை கையாள முடியும் என தெரிவித்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!