50 சிறிலங்கா இராணுவத்தினருக்கு இந்தியாவில் தொடருந்து சாரதிப் பயிற்சி

சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 50 பேருக்கு, இந்தியாவில் தொடருந்துகளைச் செலுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

சிறிலங்கா தொடருந்து திணைக்களத்தில் பணியாற்றும் சாரதிகள், அடிக்கடி பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் பயணிகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொள்வதுடன் அரசாங்கமும் கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்கிறது.

இந்த நிலையிலேயே சிறிலங்கா இராணுவத்தின் கவசப் படைப்பிரிவைச் சேர்ந்த 50 பேரை புதுடெல்லிக்கு அனுப்பி, தொடருந்து சாரதி பயிற்சி அளிக்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இவர்களுக்கு இந்திய தொடருந்து வழித்தடங்களில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்.

மூன்று மாதகாலப் பயிற்சிக்குப் பின்னர் இவர்களுக்கு தொடருந்து சாரதிகளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!