பேசலாம் என்று பிரபாகரனை அழைத்தேன், அவர் பதிலளிக்கவில்லை – என்கிறார் மகிந்த

தமிழர் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண்பதற்கு பேச்சு நடத்துவதற்கு வருமாறு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தாம் அழைப்பு விடுத்த போதும், அவரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகவியலாளர் ஒருவருடன் நடத்திய சந்திப்பின் போதே, மகிந்த ராஜபக்ச இதனைக் கூறியுள்ளார்.

“தமிழர் பிரச்சினைக்குத் தீர்வைக் கண்டறிய நாங்கள் சந்தித்துக் கலந்துரையாட வேண்டும். அதற்கு நீங்கள் கொழும்பு வர முடியும் அல்லது நான் கிளிநொச்சிக்கு வரத் தயாராக இருக்கிறேன்” என்று பிரபாகரனுக்கு தகவல் அனுப்பினேன்.

ஆனால் பிரபாகரனிடம் இருந்து பதில் வரவில்லை. கொலைகள், தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள், படையினர் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவில்லை.

2006ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தாக்குதலைத் தொடங்குவதற்கு சிலகாலத்துக்கு முன்னர், பிரபாகரனுக்கு தகவல் அனுப்பினேன்.

“பேசலாம். வன்முறைகளை நிறுத்துங்கள். அப்பாவி பொதுமக்களை கொல்ல வேண்டாம். ஆயுதப்படையினர் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்.

துப்பாக்கிச் சூடுகளையும், கொலைகளையும் நிறுத்தாவிடின், உங்களை பௌதிக ரீதியாக அகற்றுவதற்கு நான் உத்தரவிட வேண்டியிருக்கும்” என்று அதில் கூறியிருந்தேன்.” என்றும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில் பங்கேற்றிருந்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பிரபாகரன் தான் வெல்லப்பட முடியாதவர் என்று நினைத்திருந்தார்.” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!