மடுவில் குவிந்துள்ள 6 இலட்சம் பக்தர்கள்!

மன்னார்- மடு மாதா திருத்தல வருடாந்த ஆவணி மாத திருவிழா நாளை காலை 6.30 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. கொழும்பு மறைமாவட்ட பேராயர் கருதினால் மல்கம் றஞ்சித் ஆண்டகை தலைமையில் மறைமாவட்ட ஆயர்கள் இணைந்து திரு நாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

மடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா கடந்த 6 ஆம் திகதி மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து நவநாள் ஆராதனைகள் இடம் பெற்று வந்தது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை வேஸ்பர் ஆராதனை ஒப்புக்கொடுக்கப்படவுள்ளது. நாளை புதன் கிழமை காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி கூட்டுத்திருப்பலியாக ஒப்பக்கொடுக்கப்படவுள்ளது. திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்று திருச்சொரூப ஆசிர்வாதத்துடன் நிறைவடையவுள்ளது.

மடு திருத்தலத்திற்கு நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 6 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். வருகை தந்த பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு, போக்கு வரத்து, சுகாதாரம், குடிநீர், உணவு, தங்குமிடம், மின்சாரம், உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மேற்கொ ள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.