வவுனியாவில் அமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகளின் கூட்டு நடவடிக்கை

அமெரிக்க – சிறிலங்கா விமானப்படைகள் இணைந்து வவுனியாவில் பசுபிக் ஏஞ்சல் என்ற கூட்டு மனிதாபிமான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

ஒரு வாரகால கூட்டு நடவடிக்கை கடந்த 13ஆம் நாள் ஆரம்பமானது.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் அமெரிக்க விமானப்படை மருத்துவர்கள், மற்றும் அதிகாரிகள், சிறிலங்கா விமானப்படை அதிகாரிகளுடன் இணைந்து மருத்துவ முகாம்களையும், ஏனைய சுகாதார பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளாந்தம் சுமார் 1000 நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தக் கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியில் வவுனியா அலகல்ல மகாவித்தியாலயத்தில் நேற்று நடந்த நிகழ்வில், சிறிலங்காவுக்கான பதில் அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஹில்டன், அமெரிக்காவின் பசுபிக் விமானப்படையின் தேசிய வான் காப்புப் படையின் உதவித் தளபதி மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் எய்பேர்ட், மற்றும் சிறிலங்கா விமானப்படை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் நோக்கில் பசுபிக் ஏஞ்சல் என்ற மனிதாபிமான கூட்டு நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாக சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!