அவுஸ்ரேலியா நடத்தவுள்ள பிரமாண்ட கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படை

அவுஸ்ரேலியக் கடற்படையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள ககாடு கூட்டு கடற்படைப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளது.

அவுஸ்ரேலியாவின் டார்வின் துறைமுகத்துக்கு அப்பால் ககாடு (KAKADU) என்ற பெயரிலான 14 ஆவது கூட்டு கடற்பயிற்சியை அவுஸ்ரேலியக் கடற்படை நடத்தவுள்ளது.

எதிர்வரும், ஓகஸ்ட் 30 ஆம் நாள் தொடங்கும் இந்தக் கூட்டுப் பயிற்சி செப்ரெம்பர் 15ஆம் நாள் வரை இரண்டு வாரங்கள் நடைபெறவுள்ளது.

இதில், 26 நாடுகளைச் சேர்ந்த 24 போர்க்கப்பல்கள், 21 விமானங்கள், 2000 படையினர் பங்கேற்கவுள்ளனர்.

இந்தக் கூட்டுப் பயிற்சியில் சிறிலங்கா கடற்படையும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அவுஸ்ரேலியாவில் நடைபெறும் இந்தக் கூட்டுப் பயிற்சிக்கு முதல்முறையாக சீனக் கடற்படை போர்க்கப்பல் ஒன்றும் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!