மங்களவும் சந்திரிகாவும் பிரபாகரனின் மரபணுவில் வந்த பேய்கள்! – கூட்டு எதிரணி

வடக்கில் உள்ள யுத்த நினைவுச் சின்னங்கள் அகற்ற வேண்டுமென முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்த கோரிக்கையை, முதுகெலும்பில்லாத அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பத்ம உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.

எனினும், முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கோரிக்கையை கூட்டு எதிரணி முற்றுமுழுதாக நிராகரிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வடக்கில் காணப்படும் யுத்த நினைவுச் சின்னங்கள் என்பது, நாட்டின் அனைத்து மக்களும் அமைதியாய் வாழ்வதற்கு வழி செய்த இராணுவ வீரர்களை நினைவுக்கூருவதற்கான நினைவுச் சின்னங்கள் என்பதை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமவீர ஆகியோர், தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் மரபணுவில் வந்த பேய்கள் என்றும் ​பத்ம உதயசாந்த குணசேகர கடுமையாக விமர்சித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!