எந்தக் காரணத்திற்காகவும் மாகாண சபைத் தேர்தல் ஒத்திவைக்கப்படக் கூடாது! – சபாநாயகர்

எந்தக் காரணத்திற்காகவும் மாகாண சபைத் தேர்தல் ஒத்தி வைக்கப்படக்கூடாது என சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தினார். மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய குழுவின் அறிக்கைக்கு பாராளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்காததை அடுத்து, பாராளுமன்ற குழு நிலைக் கூட்டத்தில் நேற்று விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்களுக்கு மேலதிகமாக தேர்தல்கள் ஆணைக்குழு எல்லை நிர்ணய ஆணைக்குழு என்பனவற்றின் தலைவர்களுடன் சபாநாயகர் இதன் போது கலந்துரையாடினார். சபாநாயகரால் பிரதமர் தலைமையில் பெயரிடப்படவிருக்கும் குழு இந்தப் பரிந்துரையில் ஒக்டோபர் மாத நடப்பகுதியில் வழங்குமாயின் அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான முழுமையான ஆதரவை வழங்குவதாக கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தார்கள்.

இதற்கமைய கட்சிப் பிரதிதிநிதிகளின் அங்கீகாரத்துடன் ஐந்து பேர் அடங்கிய குழுவை சபாநாயகர் அறிவிக்க இருக்கிறார். பிரதமர் தவிர்ந்த குழுவில் அங்கம் வகிக்கவிருக்கும் ஏனைய உறுப்பினர்கள் துறைசார் புத்திஜீவிகள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!