ஞானசார தேரர் விவகாரத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு

பொதுபல சோனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசாரருக்கு நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 6 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை தொடர்பில் மேன்முறையீடு செய்வதை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஞானசார தேரரின் தண்டனையை மேன்முறையீட்டுக்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு வாழங்குவதா இல்லையா என்பது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தவிசாளரான நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன உள்ளிட்ட நிதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணைகள் இடம்பெற்ற போதே இந்த விடயம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் ஆறு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனினு இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!