‘இந்தியப் பெருங்கடலின் புதிய முத்து’ – என்கிறார் சம்பிக்க

புதிதாக உருவாக்கப்பட்டு வரும், துறைமுக நகரத்தை இந்தியப் பெருங்கடலின் புதிய முத்து என்று வர்ணித்துள்ளார் சிறிலங்காவின் பெருநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க.

சீன மத்திய தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“இந்தியப் பெருங்கடலின் புதிதொரு முத்தாக துறைமுக நகரம் இருக்கும். இது இந்தப் பிராந்தியத்துக்கு பொருளாதார வாய்ப்புகளை கொண்டு வரும்.

துறைமுக நகரம் சிறிலங்காவுக்கு மத்திரமன்றி, கிழக்கு ஆபிரிக்கா, மத்திய ஆசியா, மேற்கு ஆசியா போன்றவற்றுக்கும் கூட நன்மையைக் கொடுக்கும்.

துறைமுக நகருக்கு மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகங்களை வழங்க சிறிலங்கா அரசாங்கம் 1 பில்லியன் டொலரை முதலீடு செய்யும்.

மின்சாரம் மற்றும் குடிநீரை நாங்களே துறைமுக நகருக்கு விநியோகம் செய்வோம். அதில் அரசாங்கம் முதலீடு செய்யும்.

துறைமுக நகரத்துக்காக முதலீடு செய்யப்பட்ட நிதியை 10 ஆண்டுகளில் மீளப் பெற்று விட முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!