சுதந்திரக் கட்சியில் இருந்து விரட்டி விட்டனர்! – மஹிந்த ஆதங்கம்

தற்போதைய அரசாங்கத்தை விரட்டுவதற்கான முதல் கட்ட நடவடிக்கையே மக்கள் சக்தி ஆர்ப்பாட்ட பேரணி என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 67 ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும் கட்சிக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி வலுவானது எமது ஆட்சிக்காலத்திலேயே. அவ்வாறு வலுவான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையே தற்போதைய நிர்வாகிகளிடம் ஒப்படைத்தேன். நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விரட்டப்பட்டோம். அதன் பின்னரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவானது ” என்றும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!