வடமராட்சி களப்பில் இருந்து யாழ்ப்பாணத்தில் 2000 மில்லியன் ரூபா செலவில் குடிநீர் திட்டம்!

யாழ். தீவக மக்களுக்கு குடிநீரை விநியோகிப்பதற்கு 2000 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. வடமராட்சி களப்பு நீர் வளத்தை பயன்படுத்தி யாழ் தீவகத்தில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை விநியோகிப்பதற்காக உத்தேச திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள சாத்தியக்கூறு அறிக்கைக்கு அமைவாக 2000 மில்லியன் ரூபா முதலீட்டுடன் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீர்ப்பாசன, நீர் வள மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!