ஜப்பானில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மீட்பு பணிகள் தீவிரம்

ஜப்பான் வடக்கு தீவான ஹொக்கைடோவில் இன்று அதிகாலை ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு 32 பேர் காணாமல் போயுள்ளனர்.

6.7 ரிக்டர் அளவில் பதிவான இந் நிலநடுக்கத்தில் 120 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஹொக்கைடோவில் மீட்பு பணிகளில் 25000 பாதுகாப்பு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் ஹொக்கைடோவின் பிரதான விமான நிலையமும் சிட்டோஸ் விமான நிலையமும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!