முன்கூட்டியே தேர்தலை நடத்தமாட்டேன்- சிறிலங்கா அதிபர் திட்டவட்டம்

அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தப் போவதில்லை என்று சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நிவித்திகலவில் நேற்று பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ சில மூத்த அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் முன்கூட்டியே அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று கூறி வருகின்றனர். ஆனால் தேர்தலை நடத்தும் நாளை முடிவு செய்யக் கூடிய ஒரே நபர் நான் மட்டும் தான்.

திடீர் தேர்தலை என்னால் மட்டும் தான் அறிவிக்க முடியும். ஆனால், குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாக, அதிபர் தேர்தலை நடத்தும் எண்ணம் என்னிடம் இல்லை.

முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படும் என்பது தேவையற்ற வதந்தி.

பதவிக்காலம் முடியும் வரை பதவியில் நீடிப்பேன், ஒரு நாள் முன்னதாக கூட தேர்தலை நடத்தப் போவதில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!