புதுடெல்லியில் கருத்துக் கூற மறுத்த மகிந்த

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்க தமிழ்நாடு அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளமை குறித்து கருத்து வெளியிட, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மறுப்புத் தெரிவித்துள்ளார்.

சுப்ரமணியன் சுவாமியின் அழைப்பின் பேரில், மூன்று நாட்கள் பயணமாக, புதுடெல்லியை நேற்று வந்தடைந்த அவரிடம், விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்கு அவர், “இது இந்திய அரசாங்கம் முடிவு செய்ய வேண்டிய விடயம், நான் இதுபற்றிக் கருத்துச் சொல்ல விரும்பவில்லை, இது ஒரு சட்ட விவகாரம்” என்று கூறிவிட்டு நழுவியுள்ளார்.

நேற்று புதுடெல்லி சென்றடைந்த மகிந்த ராஜபக்ச மற்றும் குழுவினரை, சுப்ரமணியன் சுவாமி மற்றும் இந்திய அதிகாரிகள் வரவேற்றனர்.

சிறிலங்கா அதிபருடன் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் உள்ளிட்டவர்களும் புதுடெல்லி சென்றுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!