நொவம்பர் 05ஆம் நாள் வரவுசெலவுத் திட்டம்

Sri Lankans watch the proceedings during the commencement of Parliament in Colombo, Sri Lanka, Thursday, April 22, 2010. Sri Lanka’s former army chief Sarath Fonseka on Thursday used his first opportunity to address Parliament as a newly elected lawmaker to demand his release from detention. (AP Photo/Eranga Jayawardena)
2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் எதிர்வரும் நொவம்பர் 05ஆம் நாள் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் நேற்று முன்தினம் மாலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடந்த அரசாங்க தரப்பு நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

நொவம்பர் 05ஆம் நாள் பிற்பகல் 2 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் போது, நிதியமைச்சர் மங்கள சமரவீர வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பார்.

வரவுசெலவுத் திட்ட விவாதம், 26 நாட்கள் நடைபெறும்.

நொவம்பர் 7ஆம் நாள் தொடக்கம், 14ஆம் நாள் வரை, வரவுசெலவுத் திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெறும்.

நொவம்பர் 14ஆம் நாள் மாலை இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.

குழு நிலை விவாதங்களை அடுத்து, டிசெம்பர் 8ஆம் நாள் இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும்.

சனிக்கிழமைகளிலும் நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்ட விவாதம் இடம்பெறவுள்ள

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!