ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான இறுதி அறிக்கையினை ஒப்படைப்பதற்கு சபாநாயகர் உறுதி – ஐக்கிய மக்கள் சக்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையினை முழுமையாக ஒப்படைப்பதற்கு சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த இணக்கம் காணப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான அறிக்கையை முழுமையாக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையில் ஒரு பகுதி மாத்திரமே இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை எதிர்வரும் திங்களன்று முழுமையாக சமர்ப்பிக்கப்படும் என , சபாநாயகர் தெரிவித்துள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து விவாதிப்பதற்கும், நாடாளுமன்ற விவாதம் மேற்கொள்ளப்பட வேண்டும் என, அவர் கோரியுள்ளார்.

எனினும், இந்த விடயத்தில் அரசாங்கம் தொடர்ச்சியாக தயக்கம் காட்டி வருவதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.

மேலும், அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை, எதிர்வரும் திங்களன்று பகிரங்கப்படுத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!