அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதி வழங்கியுள்ள முக்கிய அறிவுரை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அரசாங்கத்திற்கு சில அறிவுறுரைகளை வழங்கியுள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

மக்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது எவ்வாறு என்ற பிரச்சினை எழுந்துள்ளது. பொருளாதாரம், அரசியல், சமூகப் பிரச்சினைகள் மற்றும் சர்வதேசம் என்பனவற்றை நாம் குழப்பிக்கொண்டுள்ளோம்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைக்கு தீர்வு காண சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுமாறு பலர் கோருகின்றனர். எனினும் அரசாங்கத்தின் பிரதானிகள் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படப் போவதில்லை என கூறுகின்றார்கள்.

எனினும் நான் எனது ஆட்சிக் காலம் முழுவதிலும் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாற்றினேன். சர்வதேச நாணய நிதியதம் எனக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்கவில்லை.

சில நிபந்தனைகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர்களிடம் திட்டவட்டமாக கூறியிருந்தேன் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!