ஆட்சி இல்லாமல் போகக்கூடிய இக்கட்டான நேரத்தில் சவேந்திர சில்வாவிற்கு ரணில் வழங்கிய செய்தி

நாடாளுமன்றம் வீழ்ந்தால் அரசியலமைப்பு பறிபோகும், எனவே கடந்த மாதம் போராட்டக்காரர்களால் நாடாளுமன்றத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது பாதுகாப்புச் சபையின் தலைவர்களிடம் குறிப்பாக சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லியனகே ஆகியோரிடம் நாடாளுமன்றத்தை பாதுகாக்குமாறு தான் கூறியதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இராணுவத்தலைமையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாடாளுமன்றத்தை இழந்தால் ஆட்சி இல்லாமல் போகும், நாடாளுமன்றம் இல்லாவிட்டால் பாதுகாப்பு அமைச்சை செயற்படுத்த முடியாது.

அதனால் தான் அந்த செயற்பாட்டை உங்களிடம் ஒப்படைத்தேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!