ஜப்பானில் அனல் காற்று; 65 பேர் பலி

ஜப்பானில் நிகழும் கடும் வெயிலினால் ஏற்பட்டுள்ள அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகி உள்ள நிலையில் ஜப்பான் வானிலை ஆராய்ச்சி மையம் இதனை தேசிய பேரிடராக அறிவித்துள்ளது.

ஜப்பானில் கடும் வெயில் ஏற்பட்டுள்ளது. அத்தோடு அனல் காற்றும் வீசுகிறது. அங்கு அதிகபட்சமாக குமகாயா என்ற பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை 106 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது. ஜப்பான் வரலாற்றில் இதுவே அதிகபட்ச வெப்பநிலை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அகஸ்ட் மாத தொடக்கம் வரையில் அங்கு அதிகபட்சமாக 95 டிகிரி வெப்ப நிலை தொடரும் என அந்த நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

குறித்த வெயிலால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடும் வெயிலில் மயங்கி விழுந்து 22 ஆயிரம் பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். கடந்த 1 வாரத்தில் அனல் காற்றுக்கு 65 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!