ஐ.நா பொதுச்சபை அமர்வில் சிறிலங்கா அதிபர்

ஐக்கிய நாடுகள் சபையின், 73ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரின், பிரதான அமர்வு நியூயோர்க் நகரில் உள்ள ஐ நா தலைமையகத்தில், சிறிலங்கா நேரப்படி நேற்று மாலை ஆரம்பமானது.

ஐக்கிய நாடுகள் சபையை அனைத்து மக்களுக்கும் அணுகச் செய்தல், நீதியும் அமைதியும் பேண்தகு தன்மையும் கொண்ட சமூகத்திற்கான உலகளாவிய தலைமைத்துவத்தின் ஒன்றிணைந்த பொறுப்பு” எனும் தொனிப்பொருளில் இந்த அமர்வு இடம்பெறுகின்றது.

இந்த அமர்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

சிறிலங்கா அதிபருடன், அமைச்சர்கள் சம்பிக்க ரணவக்க, திலக் மாரப்பன, ராஜிதசேனாரத்ன, மனோ கணேசன் ஆகியோரும் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உரை இன்று அதிகாலை இடம்பெற்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!