சிறிலங்காவுக்கு 480 மில்லியன் டொலர் உதவியை வழங்குகிறது அமெரிக்கா

சிறிலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு, அமெரிக்காவின் மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனம் மூலம், 480 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படவுள்ளது.

அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, நேற்று முன்தினம் சந்தித்த மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி புரோக் பியேர்மன், இதனைத் தெரிவித்துள்ளார்.

வரும் டிசெம்பர் மாதம் கொழும்பில் இந்த நிதியுதவியை வழங்குவதற்கான உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, மிலேனியம் சவால்கள் கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரி புரோக் பியேர்மன், அழைப்பு விடுத்தார்.

இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்கா அதிபர், இந்த உதவிக்காக நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!