எனது ஆலோசனைகளை மைத்திரி கணக்கில் கொள்ளவில்லை : மஹிந்த புதிய தகவல்

நாட்டில் கடந்த மூன்று ஆண்டு காலமாக அனைத்து துறைகளிலும் வீழ்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலை மற்றும் டொலரின் பெறுமதி ஏற்றம் குறித்து அரசாங்கம் கடுகளவேனும் கவனத்தில் கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நான் வழங்கிய ஆலோசனைகளை உள்வாங்கவோ அல்லது நடைமுறைப்படுத்துவதிலோ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை எனவும் தெரிவித்தார்.

விஜயராம மாவத்தையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷ இல்லத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் ஒவ்வொரு பிழைகளும் எம்மால் சுட்டிக்காட்டும் பொழுது அவைகள் பிறிதொரு காரணத்தினால் திசைத்திருப்பபடுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் கடந்த மூன்று வருட காலத்தில் பெருவாரியாக இடம் பெற்றுள்ளது.

அதாவது முறையற்ற பொருளாதார கொள்கையினை பின்பற்றும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை மக்களுக்கு அறிவிக்கும் பொழுது அவைகள் தந்திரமாக மறைக்கப்பட்டுள்ளது . இதற்காக அரசாங்கம் சில முறையற்ற விடயங்களையும் கடந்த காலங்களில் பின்பற்றியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!