உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகளை ஐ.நா.வில் ஜனாதிபதி உறுதிப்படுத்தினார் – பொதுபல சேனா

ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எமது நாட்டின் பிரச்சினையை நாமே தீர்த்துக் கொள்வோம், வெளிநாட்டின் தலையீடுகள் தேவையில்லை என தெரிவித்துள்ளமையானது, இதற்கு முன்னர் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீடுகள் காணப்பட்டது என்பதை ஜனாதிபதி பொது மேடையில் ஏற்றுக்கொண்டதாகவே கருத வேண்டியுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பேச்சாளர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இலங்கையின் இறைமையில் தலையீடு செலுத்திய நாடுகள் தொடர்பில் ஜனாதிபதி பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!