தகவல் அறியும் உரிமை சட்டம் அடிப்படை மனித உரிமைளில் ஒன்றாகியுள்ளது : மங்கள

தகவல் அறியும் உரிமை சட்டத்தை சபாநாயகர் கரு ஜயசூரிய தனியார் பிரேரணையாக முன்வைத்தப் போது பாராளுமன்றத்தில் பாரிய எதிர்ப்புக்கு உட்படுத்தப்பட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த பல முறைகளிலும் தடங்கள் காணப்பட்டன. பெரும் முயற்சிகளின் பின்னர் கடந்த 2016ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் எதிர்ப்பு தெரிவித்தவர்களே அதே சட்டத்தை பயன்படுத்தி அரசாங்கத்தை கேள்விக்குற்படுத்துமளவுக்கு அந்த சட்டம் அடிப்படை மனித உரிமைகளில் ஒன்றாக மாறியுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

எதிர்கால சந்ததியினார் தாழ்வு மனப்பான்மையின்றி தலை நிமிர்ந்து தைரியமிக்கவர்களாக வளர வேண்டும். பல் துறைசார் அறிவுகளையும் முறையாக பெற்று வழுமிக்க சமூகமாகவும் நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச்செல்வதில் பங்காளர்களாகவும் வளர்வதற்கு இந்த தகவல் அறியும் உரிமைச்சட்டம் திகழ்வதுடன் எதிரகால புதிய தலைமுறையினர் தலைமைத்துவமிக்கவர்களாக உருவாகுவதற்கு தகவல் அறியும் உரிமை முக்கிய பங்காற்றுகின்றது என்றார்.

சரவ்தேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு தகவல் அறியும் உரிமை தொடர்பான சர்வதேச மாநாடு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு நெலும் பொகுன திரையரங்கில இடம்பெற்றது. இதன் போதே அவர் இதனை தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!